Former Telangana Governor Tamilisai at Coimbatore health program
கோவை கே.ஜி மருத்துவமனை விழாவில் முன்னாள் தெலங்கானா- புதுவை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு
கோவை கே.ஜி மருத்துவமனையில் பெண்கள் மேம்பாட்டு கருத்தரங்கு இன்று காலை நடந்தது. இதை, தெலங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் துவக்கி வைத்து பேசினார். அருகில், மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம், தலைமை நிர்வாகி வசந்தி, முதன்மை செயல் அதிகாரி அவந்திகா, டாக்டர்கள் என்.ராஜமகேஸ்வரி, டி.எம்.கிறிஸ்டி ஆகியோர் உள்ளனர்.
இதையொட்டி, கே.ஜி பவுண்டேசன் அறக்கட்டளை சார்பில், தமிழிசை சவுந்திரராஜனுக்கு “நூற்றாண்டின் சிறந்த இந்தியர் விருது”
வழங்கப்பட்டது. இதை டாக்டர் பக்தவத்சலம் வழங்கினார் விழாவில், கே.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனை ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.