Blog

26
கே.ஜி.மருத்துவமனை சார்பில் உலக இருதய நாள் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயிற்சி
கே.ஜி.மருத்துவமனை சார்பில் உலக இருதய நாள் விழிப்புணர்வு வாக்கத்தான் (நடைபயிற்சி)

ஒவ்வொரு ஆண்டும் இதய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள்கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக, இதய நோய் அறிகுறிகள், சிகிச்சை, உடல் பயிற்சியின் அவசியம், சீரான உணவு உட்கொள்வதன் அவசியம் மற்றும் உடல் உடல் பருமனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.


சமீப காலமாக முதியவர்களுக்கு மட்டுமே இருதய நோய் வரும் என்பது மாறி ஆண்/பெண் என எந்தப் பாலினத்தவருக்கும் எந்த வயதிலும் இதய நோய் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், உலக இதய தினம்மேலும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.இதனை இதய நோய் மற்றும் அறிகுறிகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறுதலான புரிதலை களைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே உரிய சிகிச்சை அளித்து அவர்கள் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.


இன்றைய நவீன மருத்துவ உலகில் நோய் இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்பதால் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினத்தன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி.மருத்துவமனை சார்பில் உலக இருதய நாள் விழிப்புணர்வு வாக்கத்தான் (நடைபயிற்சி) நடைபெற்றது. இதயத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த நடைபயிற்சியானது காலை கே.ஜி. மருத்துவமனையில் துவங்கியது.


இந்த விழிப்புணர்வு நடைப்பயிற்சியை கே ஜி மருத்துவமனையின் தலைவர்டாக்டர் பக்தவச்சலம் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நடைபயிற்சி கேஜி மருத்துவமனையில் துவங்கி 3 கி.மீ தூரம் வரை நடைபெற்றது. இதயத்தை காப்பது குறித்த கருத்துகளை அடங்கிய பதாகைகளை விழிப்புணர்வில் பங்கேற்றவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர்.இதில், மருத்துவ மாணவ, மாணவிகள், பொதுமக்கள், டாக்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக டாக்டர் பக்தவச்சலம் மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.


Share this post :